காலை மணி 10 , தி ஐஸ் ( The Eyes ) நிறுவனத்திற்கு பெண் ஒருவள் Bachelor of Arts In Archaeology and History முடித்துவிட்டு இன்டெர்வியூகாக, சென்றிருந்தாள். அவளுடைய பெயர் மேகன் சார்லஸ். பார்ப்பதற்கு அவள் மீனை போன்ற அழகான கண்களுடன் மிகவும் அழகாகவும், மெலிதாகவும் இருந்தாள். பரபரப்புடன் இருந்த அவளுடைய முகத்தை பார்த்து அருகில் , உயரமான, பார்ப்பதற்கு சினிமா நடிகன் போல் கண் கவரும் புன்னகையுடன் ஒருவன் அவளை போல் இன்டெர்வியூக்காக வந்திருக்கும் ஒருவன் " ஏன் இவளோ டென்ஷன் ? இந்த மாதிரி நெர்வோஸ் - ஆ இருந்தா அவங்க கேக்கற கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியாது " என்று அவன் சொல்லும் பொழுது மேகன் முகத்தில் நெர்வோஸ் - உடன் கலந்த ஒரு புன்னைகை இட்டு அவனை பார்க்கும் பொழுது " மை நேம் இஸ் ஆர்தர் வில்லியம் " என்று சொல்லி அவளிடம் கைகூலிக்கான். அப்படி மேகன் அவனிடம் கைகுலுக்கும் பொழுது அவளை ஆபீஸ் ரூம் உள்ளே அழைத்தார்கள். இன்டெர்வியூ அறைக்குள்ளே அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மூவர் இருந்தனர். அவர்களின் பெயர் டிஸ்னி , கொலின் , கென்னெடி. உள்ளே வந்து அமர்ந்த அவளிடம் சுமார் 30 நிமிடம் கேள்விகள் கேட்க , சலிக்காமல் அனைத்திற்கும் சரியான பதில் கூற , இறுதியில் அவளை வேலைக்கு தேர்ந்தெடுத்தார்கள்.
வேலை கிடைத்த சந்தோஷத்தில் துள்ளி குதித்து கொண்டு இந்த விஷியத்தை அவளுடைய தந்தை திரு.சார்லஸ் - இடம் கூறினாள். அச்சமயம் அவர், மேகன் அவளுடைய தாயின் கருவில் இருக்கும் பொழுது எடுத்த X - Ray ஒன்றை வைத்து கொண்டு , Tripod Stand White Board இல் ஏதோ வரைந்து கொண்டு இருந்தார். அவரும் அவளுக்கு வாழ்த்து தெரிவித்து , பின்னர் மறுநாள் மேகனை வேலைக்கு அனுப்பினார். முதல் நாள் வேலை , அதுவும் தி ஐஸ் போன்ற பெரிய நிறுவனத்தில். அங்கு அவளுக்கென தயார் செய்து வைத்திருக்கும் இடத்தில் தயக்கத்துடனே சென்று அமர்ந்தாள். " ஹாய் குட் மோர்னிங் " என்று ஒரு குரல். யார் என்று திரும்பி பார்த்தல் அது வெறும் யாரும் அல்ல ஆர்தர் வில்லியம். அவனுக்கும் அதே நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. " ஹாய் ஆர்தர் , மோர்னிங் , சாரி நேத்து உன்கிட்ட எதுவும் சொல்லாம கெளம்பிட்டன் " .
" ஹே இட்ஸ் ஒகே , சோ உன்னோட பேர் என்ன ? " .
" மேகன் சார்லஸ் " என்று முகத்தில் புன்னகையுடன் கூறி கைகுலுக்கினால். பின்னர் இருவரும் முதலில் அவர்களின் மேஜையில் உள்ள கணினியில் அவர்களுக்கு என தனி தனி உசேர் ( User ) தயாரித்தனர். அங்கு உள்ள ஹெட் செட் - ஐ அணிந்து கொண்டு மேகன் கணினியை திறக்கும் பொழுது அதில் இருந்து ஒரு குரல். " வெல்கம் மேகன் , ஹோவ் கேன் ஐ ஹெல்ப் யு ? " என்று கேட்டதை அடுத்து வியந்து போனால். எப்படி இவளுடைய பெயர் கணினிக்கு தெரியும் என்று. சரி அருகில் இருக்கும் ஆர்தரின் கணினியை பார்த்து இன்னும் வியப்படைந்தாள். காரணம் அவளுடைய கணினியில் இருக்கும் சாப்ட்வேர் ( Software ) ஆர்தரிடம் இருப்பதுபோல் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. கணினியின் முன் மீண்டும் அமர்ந்து " ஐ வாண்ட் டு கிரேட் நியூ அக்கௌன்ட் " என்று டைப் செய்த உடன் " ஒகே " என்று சொல்லி பல பைல்ஸுகளை கொண்டு ஒரு விண்டோ திறந்தது.
தொடரும்...
தொடரும்...



I loved it. Keep going higher nanba. 👌💯🔥
ReplyDelete