Skip to main content

மேகன் நவதின் மர்மம் ( பாகம் 3 )




     அங்கு ஒரு வயதானவர் நிறைத்த முடியுடன் , முகம் மறைக்கும் அளவிற்கு தாடி வைத்து கொண்டு இருந்தார்அவர்தான் அர்த்தரிடம் அந்த ஓவியத்தை எடுத்து வந்து கொடுத்தார்அது அங் அங்கு கிழிந்த நிலையில் இருந்ததுபுறப்படும் பொழுது அந்த பெரியவர் மேகனை பார்த்து  மௌனமாக சிரித்து " தேடல் ஆரம்பம் ஆகட்டும் " என்றுசொன்னவுடன் ஆர்தருக்கும் அவளுக்கும் ஒன்றும் புரியாமல் அங்கிருந்து புறப்பட்டனர்பின்னர் அலுவகத்தை அடைந்தஇருவரும் அவர்களுடைய வேலையை பார்க்க மேகன் மீண்டும் கணினியை திறந்து வேலையை துடங்கினாள்சிறிதுநேரம் கழித்து அதில் " மேகன் Top Secret " என்ற பைலை பார்த்து திறந்தாள்அதை பார்த்த உடன் அவளுடையஇரண்டு விழிகளும் பெரியதாக திறந்தனகாரணம் அவளுடைய புகைப்படமும் , இது வரை அவள் தங்கி இருக்கும்இடம் , சிறு வயது முதல் இப்பொழுது படித்து முடித்த கல்லூரி வரை அணைத்து படமும் அங்கிருந்ததுஇது எல்லாம்எப்படி இங்கே ? யார் இம்மாதிரியான வேலையை செய்திருப்பார் என்று ஒரே குழப்பம் அவளுக்குள்

     

    அந்த பெரியவரிடம் கிடைத்த அந்த ஓவியத்தை பார்த்தால் ஓரளவிற்கு இவளிடம் இருந்தது போலவே காட்சி  அளித்ததுஇதை கல்லுரியில் பயிலும் பொழுது பார்த்தது போலவே இருந்ததால் இணையதளத்தில் " Hidden Secret In Pictures " என்று தேட ஆரம்பித்தாள்அதில் பல ஆயிரம் படங்கள் வந்திருந்தனர்ஒன்றன் பின் ஒன்றாக பார்த்தபொழுது இவள் வைத்து இருப்பது போலவே ஒன்று கிடைத்தது.  இருந்தாலும் இது சரியானதா என்றுஎண்ணிக்கொண்டே ஆர்தர் -  அழைத்து இதை பற்றி எடுத்து உரைத்தாள்அந்த ஓவியத்தின் பெயர்
 " நவம் " . ஆர்தர் உடனே " இத பத்தி எனக்கு தெரியும் , இத பத்தி ஏற்கனவே ஒரு ஆய்வாளர் எழுதி உள்ளார் நான்படித்திருக்கிறேன்அவருடைய பெயர் Professor  Alex " என்றான்அந்த ஓவியம் 9 வட்டங்களுடன் , கோடுகளுடனும்இருந்தன.

      மேகன் உடனே " யார் அந்த Professor Alex , இது என்ன ஓவியம் ? " என பல சந்தேகங்களுடன்  ஆர்தரிடம் கேட்கஅவன் " உனக்கு Proffesor Alex யாருனு தெரியாதா? " என்று சொல்லி தலையை ஆடி விட்டு " நீ இப்போஉற்கார்ந்துக்கிட்டு இருக்கியே அதுவே அவரோட இடம்தா " என்று அவன் கூறியுடன் திடுக்கிட்டு போனது அவளுக்குஒன்றும் புரியவில்லை அதே சமயம் ஆர்தர் சொல்வதை நம்பாமல் இருக்க முடியவில்லைஇதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள அவனிடம் பேசினாள். " என்ன சொல்லற ஆர்தர் , இப்போ அவரு எங்க? ". " அவருக்கு என்னாச்சின்னுதெரியலசில மாதங்களுக்கு முன் அவர் காணாமல் போயிட்டதா சொல்லறாங்கஅதுமட்டுமில்ல , அவர்இதுவரைக்கும் பண்ண ஆராய்ச்சி எல்லாமே இப்போ எதுவுமே இணையதளத்தில் இல்லை " என்று ஆர்தர்சொன்னான்அதனால் தான் இந்த நிறுவனத்தில் அவருக்கு பதிலாக மேகனை வேளைக்கு எடுத்து இருப்பதாககூறினான்

     வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற அவள் குழப்பத்துடனே காணப்பட்டாள்அப்பொழுது திரு.சார்லஸ் கையில் ஒருவெள்ளை காகிதத்துடன் வந்து மேகனிடம் காட்டி " மேகன் இத பார்த்தியாஇப்படித்தான் நீ உங்க அம்மா வைத்துள்ளஇருந்த " என்று சொல்லி அவளிடம் காட்டினார்அந்த ஓவியம் சிகப்பு நிறத்தில் சிசு ஒன்று தாயின் வயிற்றில் இருப்பதுபோல் இருந்ததுஅதை கையில் எடுத்து பார்த்து அப்படியே வைத்து விட்டு உறங்க சென்றாள்உறங்கிய சிலநிமிடங்களில் திரு.சார்லஸ் வரைந்த ஓவியமும் கிழிந்த அந்த ஓவியமும் மீண்டும் மீண்டும் அவளுடைய எண்ணத்தில்வந்ததுசட்டென்று கண் விழித்து எழுந்து நவம் ஓவியத்தையும் அவள் தந்தை வரைந்த ஓவியத்தையும் எடுத்துபார்த்தாள்வெகு நேரம் பார்த்த பிறகு அவள் அந்த இரு ஓவியங்களுக்கு தொடர்பு ஒன்று இருப்பதை உணர்ந்தாள்.

தொடரும்...

Comments

Popular posts from this blog

குமரி மறைந்த ராஜ்யம் ( பாகம் 4 )

     எனக்கு   அவர்   கூறியது   எதுவும்   புரியவில்லை ,   இருந்தாலும்   அவர்   பயன்படுத்திய   மொழி   சங்க   கால   தமிழ்   என்பதால் ஒரு சில வார்த்தைகளை வைத்து என்னால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொண்டு    தங்களிடம்   நான் இப்பொழுது விளக்கி   கூறினேன் .  அதை   அடுத்து   அவர்   அதிர்வை   தரும்   வகையில்   பல   குறிப்புகளை   கூறினார் .  அதில் முக்கியமானதாக   மனித   இனம்   எப்படி   உருவானது  ,  மருத்துவ குறிப்புக்கள் மற்றும் தற்காப்பு   கலைகளின்   குறிப்புக்கள் பற்றி கூறினார் .  இதை   அனைத்தும்   ஓலைச்சுவடுகளில் எழுதி   வைத்து   அதை   குறிப்பிட்ட   ஒரு   அறையில்   வைத்து பாதுகாத்து   வந்துள்ளனர் .  எங்களுடைய   வருகையை   இதன்   மூலம்   தான்   இவர்கள்   தெரிந்து கொண்டு   எங்களை   இங்கு அழைத்து ...

மேகன் நவத்தின் மர்மம் ( பாகம் 5 )

     9  மாதம்  9  நாட்கள்   இந்த  9  கிரகங்கள்   அதனுடைய   கதிர்களை   குழந்தைகள்   கருவில்   இருக்கும்   பொழுதே தருகின்றன .  ஒவ்வொரு   கிரகமும்   குழந்தையின்   உடலின்   பாகங்களை   அதன்   இயல்புக்கு   ஏற்ப   உருவாக்குகிறது .  குழந்தை   கருவில்   வளரும்   நேரத்தில்   ஒரு   கிரகம்   பலவீனமாக   இருந்தால் ,  அதையும்   ஒரு   வழியில்   தீர்வு   காண   முடியும் என்பதையும்   கூறுகிறார்கள்   தமிழர்கள்   விஞ்ஞான   ரீதியில் .  கர்ப்பத்திலிருந்து  1  மாதம்   வீனஸ்   நடைமுறையில்   உள்ளது ,  கர்ப்ப   காலத்தில்   வீனஸ்   பலவீனமாக   இருந்தால் ,  வீனஸ்   பலப்படுத்தப்பட   வேண்டும் .  சுக்கிரன்  ( Venus )  வலிமையாக இருந்தால்   குழந்தை   மிகவும்   அழகாக   இருக்கும் .  அந்த ...