Skip to main content

மேகன் நவத்தின் மர்மம் ( பாகம் 1 )

    



     மர்மங்கள் நிறைந்ததே நாம் வாழும் இந்த உலகம்பூமியில் இன்னும் பல இடங்களில் தீர்க்கவே முடியாத மர்மங்கள்உள்ளதுஅதில் ஒரு சிலவற்றை புராண காலத்தில் வரும் கட்டுக்கதை என்பதையும் சிலர் கூறுகின்றனர்உதாரணத்திற்கு லியோனார்டோ  வின்சி ( Leonardo Da Vinci ) அவர்களின் ஓவியங்கள் மற்றும் தியரி ( Theory ) , அதில் இன்னும் கூட ஒரு சிலவற்றை தீர்க்கமுடியாத நிலையில் உள்ளதுஅதுமட்டுமல்லாமல் பெர்முடா முக்கோணம் ( Bermuda Triangle ) , எகிப்து - இல் உள்ள பிரமிட் , பரமபிதா ஜீசஸ் அவர்களின் வாரிசுகள் இன்னும் இருப்பதாகவும்அவர்களை தி நைட் டெம்ப்ளர்  ( The Knight Templar ) எனும் அழைக்கப்படுபவர்கள் காப்பாற்றி வருவதாகவும் , கிரீக்புராணங்களில் வரும் பறக்கும் குதிரைகள் & போயினீஸ் பறவை ( Unicorn & Phoenix ) , தங்க நகரம் ( El Dorado ) , வம்பிரெஸ் & வாயூவ்ல்ப்ஸ் ( Vampires & Werewolf ) என பல உள்ளனஇப்படி இருக்கும் பொழுது 13 நண்பர்கள் ஒன்றிணைந்து அமெரிக்காவில் சுமார் 300 ஆண்டு காலமாக தி ஐஸ் ( The Eyes ) எனும் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றை துவங்கி , புதைந்து கிடக்கும் மர்மங்களை தோண்டி எடுத்து அதை மக்கள் கண்களுக்கு கொண்டு வருவதும் ,அதே வேளையில் ஒரு சில சமயம் கிடைத்த பொக்கிஷங்களை அதிக விலைக்கு விற்று பணமாக்குவதும் இன்னும் ஒருசில மர்மங்களை வெளி உலகிற்கு எடுத்து வராமலும் வைத்து வந்தனர்.






     காலை மணி 10 , தி ஐஸ் ( The Eyes ) நிறுவனத்திற்கு பெண் ஒருவள் Bachelor of Arts In Archaeology and History முடித்துவிட்டு இன்டெர்வியூகாக,  சென்றிருந்தாள். அவளுடைய பெயர் மேகன் சார்லஸ்.  பார்ப்பதற்கு அவள் மீனை போன்ற அழகான கண்களுடன் மிகவும் அழகாகவும், மெலிதாகவும் இருந்தாள். பரபரப்புடன் இருந்த அவளுடைய முகத்தை பார்த்து அருகில் , உயரமான, பார்ப்பதற்கு சினிமா நடிகன் போல் கண் கவரும் புன்னகையுடன் ஒருவன் அவளை போல் இன்டெர்வியூக்காக வந்திருக்கும் ஒருவன் " ஏன் இவளோ டென்ஷன் ? இந்த மாதிரி நெர்வோஸ் - ஆ இருந்தா அவங்க கேக்கற கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியாது " என்று அவன் சொல்லும் பொழுது மேகன் முகத்தில் நெர்வோஸ் - உடன் கலந்த ஒரு புன்னைகை இட்டு அவனை பார்க்கும் பொழுது " மை நேம் இஸ் ஆர்தர் வில்லியம் " என்று சொல்லி அவளிடம் கைகூலிக்கான். அப்படி மேகன் அவனிடம் கைகுலுக்கும் பொழுது அவளை ஆபீஸ் ரூம் உள்ளே அழைத்தார்கள். இன்டெர்வியூ அறைக்குள்ளே அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மூவர் இருந்தனர். அவர்களின் பெயர் டிஸ்னி , கொலின் , கென்னெடி. உள்ளே வந்து அமர்ந்த அவளிடம் சுமார் 30 நிமிடம் கேள்விகள் கேட்க , சலிக்காமல் அனைத்திற்கும் சரியான பதில் கூற , இறுதியில் அவளை வேலைக்கு தேர்ந்தெடுத்தார்கள்.

     வேலை கிடைத்த சந்தோஷத்தில் துள்ளி குதித்து கொண்டு இந்த விஷியத்தை அவளுடைய தந்தை திரு.சார்லஸ் - இடம் கூறினாள். அச்சமயம் அவர், மேகன் அவளுடைய தாயின் கருவில் இருக்கும் பொழுது எடுத்த X - Ray ஒன்றை வைத்து கொண்டு , Tripod Stand White Board இல் ஏதோ வரைந்து கொண்டு இருந்தார். அவரும் அவளுக்கு வாழ்த்து தெரிவித்து , பின்னர் மறுநாள் மேகனை வேலைக்கு அனுப்பினார். முதல் நாள் வேலை , அதுவும் தி ஐஸ் போன்ற பெரிய நிறுவனத்தில். அங்கு அவளுக்கென தயார் செய்து வைத்திருக்கும் இடத்தில் தயக்கத்துடனே சென்று அமர்ந்தாள். " ஹாய் குட் மோர்னிங் " என்று ஒரு குரல். யார் என்று திரும்பி பார்த்தல் அது வெறும் யாரும் அல்ல ஆர்தர் வில்லியம். அவனுக்கும் அதே நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. " ஹாய் ஆர்தர் , மோர்னிங் , சாரி நேத்து உன்கிட்ட எதுவும் சொல்லாம கெளம்பிட்டன் " . 

" ஹே இட்ஸ் ஒகே , சோ உன்னோட பேர் என்ன ? " .
" மேகன் சார்லஸ் " என்று முகத்தில் புன்னகையுடன் கூறி கைகுலுக்கினால். பின்னர் இருவரும் முதலில் அவர்களின் மேஜையில் உள்ள கணினியில் அவர்களுக்கு என தனி தனி உசேர் ( User ) தயாரித்தனர். அங்கு உள்ள ஹெட் செட் - ஐ அணிந்து கொண்டு மேகன் கணினியை திறக்கும் பொழுது அதில் இருந்து ஒரு குரல். " வெல்கம் மேகன் , ஹோவ் கேன் ஐ ஹெல்ப் யு ? " என்று கேட்டதை அடுத்து வியந்து போனால். எப்படி இவளுடைய பெயர் கணினிக்கு தெரியும் என்று. சரி அருகில் இருக்கும் ஆர்தரின் கணினியை பார்த்து இன்னும் வியப்படைந்தாள். காரணம் அவளுடைய கணினியில் இருக்கும் சாப்ட்வேர் ( Software ) ஆர்தரிடம் இருப்பதுபோல் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. கணினியின் முன் மீண்டும் அமர்ந்து " ஐ வாண்ட் டு கிரேட் நியூ அக்கௌன்ட் " என்று டைப் செய்த உடன் " ஒகே " என்று சொல்லி பல பைல்ஸுகளை கொண்டு ஒரு விண்டோ திறந்தது.



தொடரும்...

Comments

Post a Comment

Popular posts from this blog

குமரி மறைந்த ராஜ்யம் ( பாகம் 4 )

     எனக்கு   அவர்   கூறியது   எதுவும்   புரியவில்லை ,   இருந்தாலும்   அவர்   பயன்படுத்திய   மொழி   சங்க   கால   தமிழ்   என்பதால் ஒரு சில வார்த்தைகளை வைத்து என்னால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொண்டு    தங்களிடம்   நான் இப்பொழுது விளக்கி   கூறினேன் .  அதை   அடுத்து   அவர்   அதிர்வை   தரும்   வகையில்   பல   குறிப்புகளை   கூறினார் .  அதில் முக்கியமானதாக   மனித   இனம்   எப்படி   உருவானது  ,  மருத்துவ குறிப்புக்கள் மற்றும் தற்காப்பு   கலைகளின்   குறிப்புக்கள் பற்றி கூறினார் .  இதை   அனைத்தும்   ஓலைச்சுவடுகளில் எழுதி   வைத்து   அதை   குறிப்பிட்ட   ஒரு   அறையில்   வைத்து பாதுகாத்து   வந்துள்ளனர் .  எங்களுடைய   வருகையை   இதன்   மூலம்   தான்   இவர்கள்   தெரிந்து கொண்டு   எங்களை   இங்கு அழைத்து ...

மேகன் நவத்தின் மர்மம் ( பாகம் 5 )

     9  மாதம்  9  நாட்கள்   இந்த  9  கிரகங்கள்   அதனுடைய   கதிர்களை   குழந்தைகள்   கருவில்   இருக்கும்   பொழுதே தருகின்றன .  ஒவ்வொரு   கிரகமும்   குழந்தையின்   உடலின்   பாகங்களை   அதன்   இயல்புக்கு   ஏற்ப   உருவாக்குகிறது .  குழந்தை   கருவில்   வளரும்   நேரத்தில்   ஒரு   கிரகம்   பலவீனமாக   இருந்தால் ,  அதையும்   ஒரு   வழியில்   தீர்வு   காண   முடியும் என்பதையும்   கூறுகிறார்கள்   தமிழர்கள்   விஞ்ஞான   ரீதியில் .  கர்ப்பத்திலிருந்து  1  மாதம்   வீனஸ்   நடைமுறையில்   உள்ளது ,  கர்ப்ப   காலத்தில்   வீனஸ்   பலவீனமாக   இருந்தால் ,  வீனஸ்   பலப்படுத்தப்பட   வேண்டும் .  சுக்கிரன்  ( Venus )  வலிமையாக இருந்தால்   குழந்தை   மிகவும்   அழகாக   இருக்கும் .  அந்த ...

மேகன் நவதின் மர்மம் ( பாகம் 3 )

     அங்கு   ஒரு   வயதானவர்   நிறைத்த   முடியுடன்  ,  முகம்   மறைக்கும்   அளவிற்கு   தாடி   வைத்து   கொண்டு   இருந்தார் .  அவர்தான்   அர்த்தரிடம்   அந்த   ஓவியத்தை   எடுத்து   வந்து   கொடுத்தார் .  அது   அங்   அங்கு   கிழிந்த   நிலையில்   இருந்தது .  புறப்படும்   பொழுது   அந்த   பெரியவர்   மேகனை பார்த்து    மௌனமாக   சிரித்து  "  தேடல்   ஆரம்பம்   ஆகட்டும்  "  என்று சொன்னவுடன்   ஆர்தருக்கும்   அவளுக்கும்   ஒன்றும்   புரியாமல்   அங்கிருந்து   புறப்பட்டனர் .  பின்னர்   அலுவகத்தை   அடைந்த இருவரும்   அவர்களுடைய   வேலையை   பார்க்க   மேகன்   மீண்டும்   கணினியை   திறந்து   வேலையை   துடங்கினாள் .  சிறிது நேரம்   கழித்து   அதில்  "  மேகன்  Top Secret "  என்...