Skip to main content

குமரி மறைந்த ராஜ்யம் ( பாகம் 4 )





     எனக்கு அவர் கூறியது எதுவும் புரியவில்லை , இருந்தாலும் அவர் பயன்படுத்திய மொழி சங்க கால தமிழ் என்பதால்ஒரு சில வார்த்தைகளை வைத்து என்னால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொண்டு  தங்களிடம் நான்இப்பொழுது விளக்கி கூறினேன்அதை அடுத்து அவர் அதிர்வை தரும் வகையில் பல குறிப்புகளை கூறினார்அதில்முக்கியமானதாக மனித இனம் எப்படி உருவானது , மருத்துவ குறிப்புக்கள் மற்றும் தற்காப்பு கலைகளின் குறிப்புக்கள்பற்றி கூறினார்இதை அனைத்தும் ஓலைச்சுவடுகளில் எழுதி வைத்து அதை குறிப்பிட்ட ஒரு அறையில் வைத்துபாதுகாத்து வந்துள்ளனர்எங்களுடைய வருகையை இதன் மூலம் தான் இவர்கள் தெரிந்து கொண்டு எங்களை இங்குஅழைத்து வந்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்ததுஆனால் எனக்குள் ஒரு கேள்வி , பல்லாயிரம்வருடங்களுக்கு முன் அழிந்த ஒரு கண்டத்தில் இருந்து இவர்கள் மட்டும் எப்படி தப்பி இருக்க கூடும் ? , எப்படிகடலுக்கடியில் இன்னும் சுவாசிக்கும் வகையில் நகரம் அமைத்து வாழமுடியும் என்று எனக்குள் எழுந்த கேள்வியை அவரிடம் கேட்டதிற்கு அவர் கூறிய பதில் என்ன தெரியுமா ?

     அவர் உலகம் அழியும் காலம் ஒரு நாள் வரும் அப்பொழுது தான் கடலுக்குள் மூழ்கிய இந்த நகரம் கரைக்கு வரும்இது எங்களுக்கென எழுத பட்டிருக்கும் விதிஇங்கு உள்ள ஒரு சில குறிப்புகளை கொண்டே எங்களால் உயிர் வாழமுடிகிறதுகலியுகம் முடிந்து வரக்கூடிய யுகத்தில் நாங்கள் வைத்திருக்கும் குறிப்புக்கள் மிகவும் உதவியாக இருக்கும்அதுமட்டுமல்லாமல் இதுவரை உலகிற்கே தெரியாத பல அற்புத தொழில்நுட்பம் கூட உள்ளதாக கூறினார்இதுஎல்லாம் ஒரு பக்கம் இருக்க வியப்பூட்டும் படி அவர்கூறியது , இதை எல்லாம் நான் பாதுகாக்க வேண்டும் மற்றும் என் மூலமாகத்தான் இது இந்த உலகிற்கு சென்றடையும் என்று அவர் சொல்லியதுஎன்ன சொல்கிறீர்கள் ? என்றுகேட்டதிற்கு " ஆம் நீதான் இதன் பிறகு இதை பாதுகாத்து வெளியுலகிற்கு நல் முறையில் கொண்டு சேர்க்க வேண்டும்பரம்பரை பரம்பரையாக நம்முடைய வம்சாவளிகளின் கடமை இது " என்றார்.

     " என்ன நான் உங்கள் பரம்பரையை சேர்ந்தவனா ? " என்று குழப்பத்தில் நான் கேட்டதிற்கு அவர் " நீ  எங்கள்பரம்பரையை சேர்ந்தவன் மட்டுமல்ல இந்த குமரி நாட்டின் கடைசி இளவரசன் நீ ஆவாய்குமரி மகாராணியின்வம்சத்தில் விதைத்த கடைசி விதை நீ " என்று ராஜா நெஞ்சை மற்றும் குரலை உயர்த்தி கம்பிரமாக கூறியதை கேட்டுவியப்பில் ஆழ்ந்து , தீர்க்க முடியாத பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல்  நின்று கொண்டிருக்க வெள்ளை நிறஆடையில் ஒருவர் இளமையாகவும் பார்க்கவே சாந்தமாகவும் பெண் ஒருவர் வந்து நின்றார்அவர் என்னருகில் வந்துபுன்னகைத்து என் கன்னத்தில் கைவைத்து பதில் கிடைக்கும் வரை தேடலை நிறுத்தாதே , வரலாற்றை அழியாமல்பாதுகாப்பாய் " என்று சொல்லி மெல்ல மறைய ஆரம்பிக்கும் பொழுது தூரத்தில் இருந்து மின்னல் வேகத்தில் வந்துஎதோ ஒன்று என் அருகில் இருக்கும் இரண்டு காவலாளிகளை தாக்கியதில் அப்படியே கீழே விழுந்தனர்என்ன என்றுதிரும்பி பார்த்தால் தூரத்தில் இருந்து அம்பு மழைகள் என்னை நோக்கி பாய்ந்து வந்ததை பார்த்து மலைத்து போய்நிற்க ராஜா " குமரா இங்கிருந்து விரைந்து புறப்படுஉன்னை நாங்கள் பாதுகாக்க வேண்டும் " என்று சொல்லிபாய்ந்து வந்த அம்பு மழையை இவர் ஒருவராக இருந்து அவருடைய வாளை கொண்டு தடுத்தார்.



          அங்கிருந்த தப்பித்து ஓடும் பொழுது என்னுடைய மனதிற்குள் கேள்வி தான் எழும்பியதுஅது நான் எப்படிகுமரியின் இளவரசனாக முடியும் ? அந்த பெண் யார் ? இப்பொழுது தாக்குபவர்கள் யார் ? என்று சிந்தித்து ஓடும்பொழுது எனக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்ததுஅது என்னவென்றால் அரண்மையை தாக்கும் வீரர்கள் அணிந்துஇருக்கும் அதே பொற்கவசங்களை அனைத்து கொண்டு இருந்தான் என் நண்பன் அருண். " அருண் , என்ன இது ? " . " குமரா நீயா ? என்ன மன்னிச்சிரு " என்று சொல்லி ஓடி வந்து என்னை கத்தியில் குத்த என்ன ஆயிற்று தெரியுமா ?


நன்றி

Comments

Post a Comment

Popular posts from this blog

மேகன் நவத்தின் மர்மம் ( பாகம் 5 )

     9  மாதம்  9  நாட்கள்   இந்த  9  கிரகங்கள்   அதனுடைய   கதிர்களை   குழந்தைகள்   கருவில்   இருக்கும்   பொழுதே தருகின்றன .  ஒவ்வொரு   கிரகமும்   குழந்தையின்   உடலின்   பாகங்களை   அதன்   இயல்புக்கு   ஏற்ப   உருவாக்குகிறது .  குழந்தை   கருவில்   வளரும்   நேரத்தில்   ஒரு   கிரகம்   பலவீனமாக   இருந்தால் ,  அதையும்   ஒரு   வழியில்   தீர்வு   காண   முடியும் என்பதையும்   கூறுகிறார்கள்   தமிழர்கள்   விஞ்ஞான   ரீதியில் .  கர்ப்பத்திலிருந்து  1  மாதம்   வீனஸ்   நடைமுறையில்   உள்ளது ,  கர்ப்ப   காலத்தில்   வீனஸ்   பலவீனமாக   இருந்தால் ,  வீனஸ்   பலப்படுத்தப்பட   வேண்டும் .  சுக்கிரன்  ( Venus )  வலிமையாக இருந்தால்   குழந்தை   மிகவும்   அழகாக   இருக்கும் .  அந்த ...

மேகன் நவதின் மர்மம் ( பாகம் 3 )

     அங்கு   ஒரு   வயதானவர்   நிறைத்த   முடியுடன்  ,  முகம்   மறைக்கும்   அளவிற்கு   தாடி   வைத்து   கொண்டு   இருந்தார் .  அவர்தான்   அர்த்தரிடம்   அந்த   ஓவியத்தை   எடுத்து   வந்து   கொடுத்தார் .  அது   அங்   அங்கு   கிழிந்த   நிலையில்   இருந்தது .  புறப்படும்   பொழுது   அந்த   பெரியவர்   மேகனை பார்த்து    மௌனமாக   சிரித்து  "  தேடல்   ஆரம்பம்   ஆகட்டும்  "  என்று சொன்னவுடன்   ஆர்தருக்கும்   அவளுக்கும்   ஒன்றும்   புரியாமல்   அங்கிருந்து   புறப்பட்டனர் .  பின்னர்   அலுவகத்தை   அடைந்த இருவரும்   அவர்களுடைய   வேலையை   பார்க்க   மேகன்   மீண்டும்   கணினியை   திறந்து   வேலையை   துடங்கினாள் .  சிறிது நேரம்   கழித்து   அதில்  "  மேகன்  Top Secret "  என்...