பின்னர் அவளுக்கென கொடுத்திருக்கும் வேலையை செய்து முடித்துவிட்டு , இதை பற்றி யாரிடமும் சொல்லாமலும் கேட்காமலும் வீட்டிற்கு புறப்பட தயாரானாள். அதனால் இதுவரை செய்து வைத்திருக்கும் பைல்ஸ் - ஐ மேஜையில் உள்ள ட்ராவ்ர் ( Drawer ) - இல் திறந்து வைக்கும் பொழுது அங்கு அவளுடைய கண்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் கிழிந்த நிலையில் பாதி ஓவியம் ஒன்று இருந்தது. என்னவாக இருக்கும் என்று கையில் எடுத்து பார்க்கும் பொழுது அவளுடைய கேபின் ( Cabin ) பின்னே " சோ ஹோவ் வாஸ் யுவர் ஒர்க் டுடே ? " என்று நிறுவனிதின் முதலாளி கொலின் வந்து நின்று கேட்டார். திடுக்கிட்டு எழுந்து ஓவியத்தை கை பின்னே மறைத்து எழுந்து நின்று " ஆல் பைன் சார் " என்று சிறிது கொண்டே பதில் சொல்லி அவளுடைய கைப்பையை எடுத்து ஓவியத்தை அதனுள் வைத்து " ஒகே பாய் சார் " என்று சொல்லி புறப்பட்டாள். வெளியே சென்ற பொழுது அங்கு ஆர்தர் அவளுக்காக காத்திருந்தான். " அப்பறோம் இதோட வீட்டுக்குத்தானே ? , வா ஒண்ணா போலாம் " என்று சொல்லி இருவரும் ஒரு பேருந்து எடுத்து புறப்பட்டனர்.
அப்பொழுது மேகன் கைப்பையில் உள்ள ஓவியத்தில் வரைந்து இருக்கும் பாதி படத்தில் இருந்து ஓளி வீசியது. அப்படி என்ன ஓவியமாக இருக்கும் அது ?
இரவு சுமார் 8 மணி அளவில் ஆர்தரிடம் பேசிக்கொண்டே அவளுடைய இருப்பிடத்தை அடைந்தாள் மேகன். " சரிநாளைக்கு பார்க்கெலாம் , பாய் " என்று சிரித்துக்கொண்டே சொல்லி வீட்டிற்கு சென்றாள். வெகு நேரம் வேலைஎன்பதால் அசதியாக இருந்த அவள் குளித்துவிட்டு திரு.சார்லஸ் செய்து வைத்து இருக்கும் இரவு உணவை உண்டுவிட்டு உறங்க சென்றாள். அவளுடைய படுக்கையில் படுக்க செல்லும் பொழுது அவளுடைய கைப்பையில் இருந்துவெளிச்சம் வர வியந்து பார்த்து அருகில் சென்றாள். அப்பொழுது தான் கிழிந்த ஓவியம் ஒன்று புறப்படும் முன் எடுத்துவைத்தது அவளுக்கு நியாபகம் வந்தது. அடுத்த நொடியே கைப்பையை திறந்து அதை எடுத்த பார்க்க , அதில் இருந்துஒளி வரவில்லை மாறாக ஏதோ ஒன்று மெல்லிய கோடுகளுடன் சேர்ந்து உருண்டை வடிவத்தில் வரைந்து இருந்தது. இது என்னவாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டே படுக்கையில் படுத்தாள்.
மறுநாள் காலை வேலைக்கு சென்றவுடன் அங்கு ஆர்தர் பரபரப்பாக எங்கொ புறப்படுவதை பார்த்து " இவளோவேகமா எங்க போறிங்க ? ". " ஆமா இங்க பக்கத்துல எங்கையோ பல்லாயிரம் வருஷம் பழமையான ஒவ்வியம் ஒன்னுகெடச்சிருக்குனு இன்போர்மஷன் வந்துச்சி. அதான் அங்க போறேன் " என்று அவன் சொன்னான். ஓவியம் என்றுசொன்னவுடன் மேகன் முகம் மாறியது , " பார்த்து போயிடு வா " என்று அவள் சொன்னாள். " நீயும் என்கூட வா , தனியாபோன ரொம்ப போரிங் ஆ இருக்கும் " என்று பாவமான முகத்துடன் கேட்டவுடன் முதலில் முடியாது என்று மறுத்தாள். பின்னர் ஆர்தர் கெஞ்சுவதை பார்த்து , சம்மதித்து அவனுடன் புறப்பட்டாள்.

Awesome 👌💯💯
ReplyDelete