அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
எழுத்துகளுக்கெல்லாம் ' அ ' எப்படி முதன்மையாக உள்ளதோ, அது போல் தான் உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன. அப்படி உலகம் பிறந்த நாள் முதல் இப்பொழுது வரை உயிரினங்கள் எல்லா திசைகளிலும் பிறந்து கொண்டுதான் இருக்கின்றனர். மனிதர்களின் இன பெருக்கம் , மிருகங்களின் இன பெருக்கம் , மரம் செடி கொடி என அனைத்தும் இன பெருக்கம் செய்து கொண்டு தான் வருகின்றது. இருப்பினும் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க உலகத்தில் உள்ள வளங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க படுகின்றனர். அதிலும் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் இருந்து நிறைய தனியார் நிறுவனங்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப சுரங்கள் தோண்டி தங்கம் , வைரம் , உலோகம் என அனைத்தையும் எடுத்து விற்பனை செய்கின்றனர். காடுகளை அழித்து வீடு , தொழிற்ச்சாலை கட்டுவதும், மிருங்கங்களை வேட்டையாடி கொன்று உணவாக உண்பது மட்டும் அல்லாமல் , சிங்கம் , புலி , மான் , யானை என அறிய வகையான வன விலங்குகளின் பற்கள் , தோல் , தந்தம் இறைச்சி என அனைத்தையும் விற்று வியாபாரமாகி பணமாகின்றனர். இப்படி உலகம் விரைந்து செயல் பட்டு கொண்டு இருக்கும் கால கட்டத்தில் , பொருளாதாரம் குறித்தும் , சுற்று பயணம் மற்றும் மேற்கல்வி கற்க காரணமாக சிலரும் நாடு விட்டு நாடு சென்றனர்.
கடல் வழி பயணம் செய்வது என்பது சுலபமான காரியம் அல்ல. அதற்கு கடலின் நீரோட்டத்தை தெரிந்து இருப்பது மிகவும் அவசியம் ஆகிறது. இல்லையேல் கப்பலில் பயணம் செய்பவர்கள் காணாமல் போய்விடுறார்கள் ஏனென்றால்உலகின் 71 சதவிதம் சுற்றளவு நீரால் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆகையால் தான் அந்த காலத்தில்அதாவது கடல் கடந்து பயணம் செய்து , ஐரோப்பிய கண்டங்களில் உள்ள நாடுகளுடன் வியாபாரம் செய்த சோழமன்னர்களும் மற்றும் பாண்டிய மன்னர்களும் ஆமையின் உதவியுடனே பயணம் செய்தனர். இன்றய காலத்தில்நிலத்துக்கும் கடலுக்கும் தொடர்புடைய ஒரே விலங்கு இனம் ஆமை தான். நிலத்தில் பிறந்து கடலுக்கு சென்றுமீண்டும் முட்டை இட பிறந்த இடத்திற்கே வந்து முட்டை இடும். இதை வைத்து தான் அப்பொழுதே தமிழ் மன்னர்கள்சீனா , கிரேக்கம் என பல நாடு , கண்டம் என சென்று வியாபாரம் செய்து வந்தனர் என்பது மறைக்க முடியாதுஉண்மையாகும்.
கப்பலில் பயணம் செய்யலாம் ஆனால் வெகு நாட்கள் எடுக்கும் அதே சமயம் குறிப்பிட்ட அளவே ஆதாயம் பார்க்கமுடியும் மற்றும் அதிக ஆபத்து உள்ளது. கடலில் பொதுவாகவே பேரலை , சுழற்சி என பல ஆபத்துகள் உள்ளது. ஒருவேலை கப்பல் முழுக்க தங்கம் நிறைத்து எடுத்து சென்று கொண்டு இருக்கும் பொழுது கனத்த மழையுடன் புயல்வீசினால் கப்பல் கடலிலையே மூழ்க வேண்டிதான். அதை மீண்டும் மீட்பது என்பது இயலாத காரியம் ஆகும். பெரும்செலவு மற்றும் நடுக்கடலில் சென்று ஆபத்தான வேலையை செய்ய யாரும் அவ்வளவு எளிதில் வர மாட்டார்கள். இதனால் பல மடங்கு நஷ்டம் அந்த தனியார் நிறுவனங்களுக்கு ஏற்படும். இருப்பினும் இதற்கு ஒரு வழி பிறக்கும் வரைகப்பல் மூலமே வியாபாரம் செய்து கொண்டு இருந்தனர். இப்படி இருக்கும் பொழுது 1903 , டிசம்பர் 17 அன்று முதல்வானில் பறக்கும் விமானம் ஒன்று பயணிகளை ஏற்றி செல்ல வில்பர் மற்றும் ஓர்வில்லே ரைட் ( Wilbur and Orville Wright ) இவர்களை ரைட் பிரோதெரஸ் ( The Wright Brothers ) என்றும் அழைப்பார்கள்.
யாழ்ப்பாணம் நூலகம்
இப்பொழுது நான் யார் என்று சொல்லும் நேரம் வந்து விட்டது. ஆம் நான் வேறு யாரும் இல்லை....சற்றுபொறுங்கள் என்னை யாரோ ஒரு சிலர் தூரத்தில் இருந்து கவனிப்பது போல் உள்ளது. உங்களிடம் நான் பேசுவதைபார்த்தால் எனக்குதான் ஆபத்து. அவர்கள் சென்றவுடன் உங்களிடம் என்னுடைய கதையை தொடர்கிறேன்.
தொடரும்...



Comments
Post a Comment