முதலில் என்னுடைய கருப்பு பெட்டியைத் தேட ஆரம்பித்தேன். ஏனென்றால் அது மட்டும் இருந்தால் நான் எங்குதரை இறங்கி உள்ளேன் என்று சுலபமாக கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணி கொண்டே அதை தேடி பார்த்தபொழுது அதிர்ச்சியான செய்தி ஒன்று எனக்கு காத்து இருந்தது. அது தான் கருப்பு பெட்டியை காணவில்லை. அந்தஒரு நொடிதான் அன்று எதோ ஒன்று நடந்திருக்கிறது என்று உணர்ந்தேன். புறப்படும் நாள் முன் வழக்கத்திற்கு மாறாகஎன்னை சரி செய்ய வந்த நபரில் ஒருவன் என்னை தயார் செய்து முடிக்கும் பொழுது என்னுள் ஏதோ ஒன்றைஇழந்ததை அன்றே உணர்ந்தேன். ஆனால் இது மாதிரி நடப்பது இயல்புதான் என்று அலட்சியமாக விட்டு விட்டேன். அன்று எப்படி நான் பறந்து கொண்டு இருக்கும் பொழுதே மயங்கினேன் , இப்பொழுது இங்கு இருக்கின்றேன் என்றுஆழமாக சிந்தித்த பொழுது எண்ணெய் டாங்கியில் இருந்து நீர் வெளியேறியது. நான் மயக்கம் அடைய இந்த நீர்காரணமாக இருக்குமோ என்று சிந்திக்க அன்று இரவு எனக்கு தாகம் எடுத்து என்னுடைய என்ஜின் - இல் எண்ணெய்யை நிரப்பிய உடனே தான் மயக்கமடைய ஆரம்பித்தேன்.
எண்ணெய் மட்டுமில்லாமல் எனக்குள் நீரையும் சேற்று நிரப்பி இருக்கிறார்கள் என்று புரிந்தது. இருப்பினும்மயக்கம் அடைந்த நான் எப்படி இங்கு வந்து சேர்ந்து இருப்பேன் என்று ஒன்றும் புரிய வில்லையே , என்னுள் பயணம்செய்த பயணிகள் எங்கே ? நான் எப்படி இங்கு வந்து கரை ஒதுங்கினேன் ? என்று நன்கு சிந்தித்து பொழுது ஒருவேலை இது தீவிரவாதிகளின் வேலையாக கூட இருக்கலாம் என்றும் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. எதனால் என்னைகடத்தி இருக்க கூடும் என்று என்னுடைய உடலை சோதனை செய்து பார்த்ததில் கிடைத்தது ஒன்று. அதுதான் இந்தஉலகையே தன் வசம் கொண்டு வரும் திட்டத்தின் புத்தகம் , அதன் தலைப்பு " அகரம் " எழுதியது , ஈசா என்று எழுதிதிரிசூலம் வடிவில் ஒன்று வரையப்பட்டு வைத்து இருந்தது. அதில் எண்ணற்றா விஷியங்கள் இருந்தது , முக்கியமாகபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் எப்படி வாழ்ந்தான் , எப்படி கூடு விட்டு கூடு பாய்வது , மனிதர்களை எப்படிகட்டுப்படுத்துவது , ஆயுதங்கள் , இது வரை யாரும் கண்டு அறிய முடியாத உலகின் முதல் வரைபடம் , செடி , கொடி , மிருகங்கள் , புவியியல், மனித வரலாறு என்று நிறைய விஷியங்கள் அதில் எழுதி இருந்தது. பல உலக நாடுகள் இன்றுவரை தேடி கொண்டு இருக்கும் பொக்கிஷம் இந்த அகரம்.
இதை வைத்திருப்பவன் கடவுளுக்கு நிகரானவன் , ஏனென்றால் இதில் முக்கியமாக காலத்தை எப்படி கணிப்பது என்றும் கூட இருக்கின்றது. ஆனால் இது எப்படி இங்கு வந்து இருக்கும் என்று ஒரு ஆழந்த கேள்வி ஒன்று எனக்குள். என்னுடைய பயணிகள் யார் யார் என்று சிந்தித்து பார்த்த பொழுது அதில் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சிஆளர்எண்ணில் பயணித்தது நியாபகம் வந்தது. ஒரு வேளை இது அவர் கொண்டு வந்து இருக்கலாம் என்றும் ஒரு முடிவுக்குவர முடிந்தது. இவர் என்மீதுதான் பயணம் செய்ய போவதை அறிந்த தீவிரவாதிகள் தான் என்னை இப்படி எல்லாம்பழுதடைய செய்து இருக்கிறார்கள். இப்படி மயங்கிய நான் கடலில் எங்கு விழ இருக்கின்றேன் என்பதையும் நன்குஅறிந்து வைத்து இருந்த அவர்கள் , விழுந்த என்னை எப்படி தரைக்கு எடுத்து வந்து இருந்தார்கள் தெரியுமா ? நான்முதலில் கண் விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய எதிரில் ஒரு கப்பல் ஒன்று இருப்பதை உணர்ந்தேன். அதன்உதவியுடன் என் மீது கயிறு கட்டி இழுத்து கொண்டே இப்படி ஒரு தீவில் போட்டு இருக்கின்றனர். இது எல்லாம் ஒருபக்கம் இருக்க என்னுடைய யூகம் சரியானால் அந்த புத்தகத்தை இங்கிருந்து எடுத்து இருக்க வேண்டும் , ஆனால்எப்படி இதை இன்னும் எடுக்காமல் இருக்கின்றனர் , பயணிகள் எங்கே ? என்று என்னால் அந்த கேள்விக்கு மட்டும்பதில் கிடைக்காமல் சிந்தித்து கொண்டு இருந்தேன். இப்படியே பல ஆண்டு காலம் ஓடி விட்டது மற்றும் நானும் பலமுறை இங்கிருந்து பறந்து செல்ல முயற்சி செய்தேன். அப்படி பறந்து செல்லும் பொழுது சிறிது தூரமே என்னால்போக முடிந்தது. அப்படி சென்ற நான் கீழே விழுந்து மீண்டும் அதே தீவில் கரை ஒதுங்கினேன். என்னுடைய பாகங்கள்ஒவ்வொன்றும் உடைந்து விழ , அனைத்தும் சிதறி போனது.
இப்பொழுது உலக நாடுகள் முழுவதும் என்னை தேடி கொண்டும் , என்னை பத்தி பேசி கொண்டும் இருக்கின்றனர்.சிலர் நான் முழுமையாக அழிந்து விட்டதாகவும் சிலர் என்னை இன்னும் நான் இருப்பதாக எண்ணி தேடி கொண்டுஇருக்கின்றனர். யாரவது ஒரு நாள் என்னை வந்து மீட்பர்கள் , அதே சமயம் என்னுடன் பயணித்து வந்த அனைவரையும்காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து கொண்டு உங்களிடம் என் கதையை சொல்லி முடிக்கிறேன். என்ன இது என்கண்கள் கூச செய்யும் அளவிற்கு ஒரு ஒளி , அது என்ன வென்று என்னால் பார்க்க கூட முடிய வில்லையே ? இந்தஇரவில் என்னை யாரோ காப்பாற்ற வந்து விட்டார்களோ என்று நான் பார்த்த பொழுது " அகரம் " புத்தகம் திறந்துஅதில் இருந்து வெளிச்சம் வந்து யாரோ என்னை இழுப்பது போல் இருக்கிறதே. " என்னை காப்பாற்றுங்கள் , என்னைகாப்பாற்றுங்கள். என்னை யாரோ தாக்க முயற்சி செய்கின்றனர். உதவி...உதவி...உதவி.......
நன்றி



www.mariay7.com
ReplyDeleteThanks for sharing 👍👍
ReplyDeletewww.mariay7.com
ReplyDelete