ஆம் நான் குமரன். தமிழர்களின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என சிறு வயது முதல் எனக்குள் ஆர்வம்இருந்தது. ஆகையால் நான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழையும் தமிழர்களை பற்றியும் படித்து தெரிந்து கொண்டேன். அன்றைய தமிழகத்தை ஆண்டது சேர , சோழ , பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் ஆவார்கள். இதில் பாண்டியர்கள் குமரிக்கண்டத்தை ஆண்டுள்ளதாக ஒரு குறிப்பும் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் இந்திய பெருங்கடலையே மறைத்துஇருந்தது என்றால் அதனுள் எத்தனை மன்னர்கள் ஆண்டு இருப்பார்கள் என்று எனக்குள் கேள்வி எழும்பியது. இதைபற்றி மேலும் தெரிந்து கொள்ள என்னுடைய நண்பர்கள் சிலருடன் சட்டத்திற்கு எதிராக நாங்கள் கடலுக்குள்இறங்கி எங்களின் ஆய்வை மேற்கொண்டோம். இதனால் எங்களுக்கு நிறைய பணம் மற்றும் பொருட்செலவுஏற்பட்டது. இதனால் சோர்வடைந்த நாங்கள் சிலமுறை ஆராய்ச்சியை நிறுத்திவிடலாம் என்று கூட பேசிஇருக்கிறோம். இருப்பினும் அடுத்த தலைமுறையாவது தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதிற்காக இதையெல்லாம்பொருட்படுத்தாமல் வேலையில் இறங்கினோம்.
அப்படி ஒரு நாள் இரவு நேரத்தில் இந்திய பெருங்கடலில் ஆராய்ச்சியை மேற்கொள்ள சென்றிருந்த பொழுது , தூரத்தில் குட்டி தீவு ஒன்று இருப்பதை பார்த்து அருகில் சென்ற பொழுது வியக்கும் அளவிற்கு எங்கள் கண்களுக்குஒன்று தெரிந்தது. அது அந்த தீவு முழவதும் பளபள என ஒளி ( Glow ) வீசியது. அதுமட்டுமல்லாமல் உடல் முழுவதும்பொற்கவசங்களுடன் இரண்டு வீரர்கள் அங்கு இருப்பதை கொண்டு வியந்து போய் நின்றோம். இது என்ன தீவகஇருக்கும் ? யார் அவர்கள் ? எப்படி இந்த ஒரு தீவு மட்டும் ஓளிவீசுகிறது ?
இதுவரை இம்மாதிரியான ஒரு தீவை எங்கள் ஆராய்ச்சியில் கண்டதில்லை என்று , அதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அருகில் சென்று தரை இறங்கினோம். நான் முதலில் என்னுடைய கால்களை தரையில்வைத்தவுடன் அந்த தீவின் மணல்களை கையில் எடுத்து பார்த்து வியந்தேன். அங்கு உள்ள மணல்கள் முதற்கொண்டுஅனைத்தும் ஒளிர செய்தது. மணல்கள் மட்டும்மல்லாமல் அங்குள்ள மரம் செடி கோடி என அனைத்திலிருந்தும் ஒளிவீச செய்தது. அடுத்த நொடியே என்னுடைய நண்பன் ,
அருண் : குமரா எனக்கு என்னமோ இந்த இடம் சரியா படல. இந்த 3 மாசத்துல இது போல ஒரு தீவு இருந்ததா நம்பபார்த்ததே இல்ல. வா இங்க இருந்து கெளம்பெலாம்.
குமரன் : நீ சொல்லறது உண்மைதா. ஆனா எனக்கு என்னமோ இங்க ஏதோ ஒன்னு நமக்காக காத்திருக்குனுநினைக்கிறேன்.
என்று பேசி முடித்தவுடன் சற்று உள்ளே முன்னேறி செல்ல எங்கள் கைகளில் உள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு சிலபொருட்கள் செயல் இழந்து போக , திசைகாட்டியில் உள்ள முற்கள் ஒரு திசையை காட்டாமல் சுற்றி கொண்டேஇருந்தது. உடனே பயந்து போன நாங்கள் அங்கிருந்து புறப்படலாம் என்று எண்ணிய பொழுது , கண்ணிமைக்கும்நேரத்தில் அந்த தீவை சுற்றி உள்ள மரங்களின் பின்னே இருந்து பலவீரர்கள் நெற்றியில் வெள்ளை நிறத்தில் பட்டை அடித்து அதில் இருந்து ஒளி வீச , கைகளில் ஆயுதங்களுடன் எங்களை சுற்றி வளைத்தனர். என்ன செய்வது என்றுதெரியாமல் நின்று கொண்டிருக்கும் அடுத்த நிமிடம் எங்களை சுற்றியுள்ள மரங்கள் வானத்தை நோக்கி உயர வளரஆரம்பித்தன.
தொடரும்...



Good content ☺️
ReplyDelete